தவறான புகைப்படம்: மன்னிப்பு கேட்ட பிபிசி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பாலிவுட் நடிகர் சசி கபூர் இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரப்பிய பிபிபி ஊடகம், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மற்றவர்களின் புகைப்படத்தை ஒளிபரப்பிய தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.

பாலிவுட் நடிகர் சசிகபூர்(79) உடல்நலக்குறைவு காரணமாக 4 ஆம் திகதி உயிரிழந்தார். இவரது இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரப்பிய பிபிசி ஊடகம், இவரது புகைப்படத்திற்கு பதிலாக, இவரது உறவினர் ரிஷி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகிய இருவரின் புகைப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.

இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்த தவறுக்காக பிபிசி ஊடகம் மன்னிப்பு கோரியுள்ளது. நிரல் ஆசிரியல் (programme's editor) Paul Royall கூறியதாவது, தவறான புகைப்படம் ஒளிபரப்பியதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், சமூகவலைதளங்களில் வெளியான பல்வேறு புகைப்படங்களால் சிறிது குழப்பம் ஏற்பட்டு இந்த தவறு நடந்துவிட்டது.

இதனால் மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்