பிரித்தானிய இளைஞர்களை பாதிக்கும் உடல் பருமன்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

இங்கிலாந்தில் மூன்றில் ஒரு இளைஞர் உடல் பருமனால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

University College London (UCL) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 10,000 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

இதில், 14 வயதுடையவர்களில் மூன்றில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், அதிக எடையுடன் இருக்கும் இளைஞர்களின் தாய்மார்களுக்கு போதிய அளவில் கல்வி அறிவு இல்லாமல் உள்ளது.

இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் உணவு குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

எனவே, அவர்கள் ஒரு கல்விதுறையில் ஒரு பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் தான் அதிக எடை கொண்ட குழந்தைகள் உள்ளனர்.

11 வயதிலேயே இவர்களின் உடல் எடை அதிகரித்து இருக்கிறது, இது ஆரோக்கியமற்ற எடையாகும், இதனால் இவர்கள் எதிர்காலத்தில் உடல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதில், 14 வயதுடைய சிறுவர்களில் வெள்ளையினத்தவர்களை விட கறுப்பினத்தவர்களே அதிக எடையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கருப்பினத்தவர்கள் 48 சதவீதம், வெள்ளையித்தனவர்கள் 34.5 சதவீதம் ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்