அமெரிக்காவின் முடிவை பிரித்தானியா ஏற்கவில்லை: பிரதமர் தெரேசா மே வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பிரித்தானியா ஏற்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த அறிவிப்பால் டிரம்பிற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரித்தானியா பிரதமர் தெரசா மே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பிரித்தானியா ஏற்கவில்லை. ஜெருசலேம் நகரின் அந்தஸ்து குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படாமல், இது போன்ற முக்கிய முடிவு எடுப்பது சரியல்ல. அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவச் செய்வதற்கு அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.

தற்போதைய நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, கிழக்கு ஜெருசலேம் என்பது பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்ற நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்கிறது.

ஜெருசலேமின் இறுதி அந்தஸ்து குறித்து பாலஸ்தீனும் இஸ்ரேலும் பேசி முடிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளின் கூட்டுத் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும். இதுவே பிரித்தானியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அதே நிலைப்பாட்டில் இப்போதும் பிரித்தானியா உறுதியுடன் உள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கான பிரித்தானியா தூதரகம் டெல் அவிவ் நகரிலேயே தொடரும் எனவும் பிரதமர் தெரசா மே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்