குழந்தையின் கல்லறைக்கு சென்ற தாய்க்கு நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

குழந்தையின் கல்லறைக்கு தாய் அஞ்சலி செலுத்த சென்ற நிலையில் அங்குள்ள சேற்று குழியில் மூழ்க பார்த்து பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அயர்லாந்தின் டோனகாதி நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மிச்செல் என்ற பெண்ணுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்து 33 நாட்களுக்குள் உயிரிழந்தது.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையின் 12-வது பிறந்தநாளை முன்னிட்டு மிச்செல் அவனின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த போனார்.

அப்போது கல்லறை பகுதி முழுக்க சேறும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அங்குள்ள சேற்றில் வழுக்கிய மிச்செல் அதில் முழ்க தொடங்கினார்.

இதையடுத்து மிச்செல் அருகிலிருந்த அவரின் சகோதரியும், அங்கிருந்த வேறு நபரும் அவரை பத்திரமாக காப்பாற்றினார்கள்.

ஏற்கனவே கல்லறை பகுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என மிச்செல் கவுன்சில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

இதையடுத்து அந்த இடத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிச்செல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகள் கூறுகையில், மழை சமயத்தில் மட்டுமே கல்லறை பகுதி இப்படி ஆகிறது, புதன்கிழமை தற்காலிகரமான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

விரைவில் வடிகால்கள் அமைத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம், மிச்செலுக்கு ஏற்பட்ட துயர அனுபவத்துக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

மிச்செல் கூறுகையில், இந்த சம்பவத்தால் என் குழந்தை பிறந்தாள் முழுவதும் நான் மன அழுத்தத்துடன் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்