பிரித்தானியாவில் Eleanor சூறாவளி காரணமாக ஏற்பட்ட மின்சார தடையால் பல இடங்கள் இருளில் மூழ்கியதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால், பல்வேறு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், சூறாவளி காற்றானது மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ், பிரித்தானியா, தெற்கு ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் இந்த நிலை நீடிக்கும்.
Winter storms can be breathtaking – literally. With #StormEleanor sweeping in please take care if you're heading to the coast over the next few days and remember to keep a safe distance back from the sea. #RespectTheWater pic.twitter.com/JJ9GOvOSzp
— RNLI (@RNLI) January 2, 2018
இதன் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வானிலை மைய தொகுப்பாளர் ஸ்டவ் தனோஸ் கூறுகையில், நாட்டின் பல பகுதியில் புதன்கிழமை காலையில் மழை இருக்கும் எனவும், சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தில் 12000-க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பிரித்தானியாவில் 2700 வீடுகளிலும், வேல்ஸில் 460 வீடுகளும் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளன.
அயர்லாந்தில் மணிக்கு 90 மீட்டர் அளவிலான சூறாவளி காற்று பல இடங்களில் வீசி வருகிறது.
பிரித்தானியாவின் ஹெர்த்போட்ஷயர் கவுண்டியில் ஆங்காங்கே மரம் விழுந்துள்ளதால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
டார்ட்போர்ட் கிராஸிங் - குயின் எலிசபெத் பாலம் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று காரணமாக கிளவ்செஸ்டெர்ஷிர்லிருந்து மன்மவுத்ஷியர் இடையில் உள்ள பாலங்களும் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளன.
தற்போது வரை பிரித்தானியாவுக்கு 50 வெள்ள அபாய எச்சரிக்கையும், வேல்ஸுக்கு 30-க்கும் அதிகமான எச்சரிக்கையும், ஸ்காட்லாந்துக்கு 10-க்கும் அதிகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
Some people are being woken up by strong #winds, #thunder and #hail tonight as #StormEleanor sweeps across the UK. Here's what's been happening so far overnight pic.twitter.com/3soelmju8B
— Met Office (@metoffice) January 3, 2018