பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் புது மாப்பிள்ளை

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவில் பத்தாண்டுகளாக வசித்து வரும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த James Geale, தனது காதலியை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட நிலையில் நாடு கடத்தப்படவுள்ளார்.

அவர் செய்த தவறு?

புகழ்பெற்ற கட்டிடங்களாகிய The Shard மற்றும் The Walkie Talkie யில் மர வேலை செய்து வருபவர் James Geale, பத்தாண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான திகதியை குறிப்பிட்ட காரணத்தினால் நாடு கடத்தப்படவுள்ளதாக The CroydonAdvertiser பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

James தன்னுடைய பாஸ்போர்ட்டை கடந்தாண்டு ஜூலை 10ம் திகதி புதுப்பித்திருக்க வேண்டும், ஆனால் அவர் ஆகஸ்ட் 12 என தவறாக நினைத்ததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பிரித்தானியப் பிரஜையாகிய தனது காதலி Miss Suttonஐ திருமணம் செய்து கொண்டால் Spouse Visa பெறலாம் என்று எண்ணி, திருமணப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றாலும் அங்கும் பாஸ்போர்ட் நகல் தேவைப்படுகிறது.

James பாஸ்போர்ட் உள்துறை அலுவலகத்தில் இருப்பதால், நாட்டை விட்டு வெளியேறினாலொழிய பாஸ்போர்ட்டைக் கொடுக்கமாட்டார்கள்.

20 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு இப்போது பிரியவேண்டும் என்று நினைக்கும்போதே பயமாக உள்ளதாக தெரிவிக்கும் James Gealeஇன் காதலி Sutton, தங்களது வாழ்வே தலைகீழாக மாறிவிட்டதுபோல் உணர்வதாக தெரிவிக்கிறார்.

James Geale குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்காததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் உள்துறை அலுவலர், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்