ஐரோப்பா சிதறிப்போகும்: எச்சரிக்கை விடுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனை விட்டுப் பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பாவே சிதறிப்போகலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றிலும் ஒன்றிணைந்த ஐரோப்பிய யூனியன் என்பதை மையக்கருத்தாகக் கொண்டு பேச்சு வார்த்தைகள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிட் பேச்சு வார்த்தைகளின்போது மற்ற ஐரோப்பிய தலைவர்கள் ஒத்தக்கருத்தாகிய ஒன்றிணைந்த ஐரோப்பிய யூனியன் என்பதை மையக்கருத்தாகக் கொள்ளாவிட்டால் மற்ற 27 நாடுகளுக்கும் "சாதகமற்ற சூழல்” உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு நாடும் தனது நாட்டுக்கு தனிப்பட்ட முறையில் என்ன நன்மை கிடைக்கும் என்று மட்டுமே யோசித்தால், ஐரோப்பியக் கண்டமே பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட்டின் செயலராகிய David Davis ”கடந்த சுற்றைப் போலவே அடுத்த சுற்றும் காரசாரமாகத்தான் இருக்கும்” என்று சில நாட்களுக்குமுன் கூறியதை அடுத்து இத்தகைய கருத்துகள் வெளியாகியுள்ளன.

Daily Telegraph பத்திரிகைக்கு அளித்த செய்தியொன்றில், "பேச்சுவார்த்தைகள் ஒளிவுமறைவற்றதாக இருக்காது” என்று தெரிவித்துள்ள David Davis, ”ஆனால் அவை வெற்றியடையும், ஏனெனில், ஐரோப்பியக் கண்டத்தின் எதிர்காலம் வலிமையான மற்றும் வெற்றிகரமான உறவுகளைப் பொருத்தது” என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “நாங்கள் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுவதால், இந்தக் கூட்டமைப்பின் பலம் மாறும் என்று நான் கருதவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்