BBC தொலைக்காட்சியின் எடிட்டராகப் பணிபுரிந்த பெண் ராஜினாமா

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி போன்ற நாடுகளில் சமீபத்தில் இயற்றப்பட்டுள்ள புதிய வெளிப்படை ஊதியச் சட்டம், ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் சம்பளம் குறித்த விஷயங்கள் இனி வெளிப்படையாக இருக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் என்று சமீபத்தில் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

இதனால் பணிபுரியும் இடத்தில் தேவையற்ற வெறுப்புணர்வு உருவாகலாம் என விமர்சகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் BBC தொலைக்காட்சியின் சீனப்பிரிவில் எடிட்டராகப் பணிபுரிந்த Carrie Gracie தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஜூலையில் BBC நிறுவனம், ஆண்டுக்கு 150,000 பவுண்டுகளுக்கு அதிகமாக ஊதியம் வாங்கும் பணியாளர்களின் ஊதியங்களை வெளியிடவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.

தனது சக எடிட்டர்களின் ஊதியங்கள் தனது ஊதியத்தைவிட குறைந்தது 50%ஆவது அதிகம் இருப்பதைக்கண்ட Carrie Gracie அதிர்ச்சிக்குள்ளானார்.

இதனால் அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார், பணத்திற்காக ராஜினாமா செய்த ஒருவராக நான் நினைவு கூறப்பட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், பிற BBC பணியாளர்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆதரவு தன்னை நெகிழச்செய்துவிட்டதாக Carrie Gracie தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்