அழகிய இளம்பெண்ணின் உயிரை பறித்த சிக்கன் பர்கர்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவில் கடந்த 2015ம் ஆண்டு சிக்கன் பர்கர் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி சஹிதா.

மோர் கலந்து செய்யப்பட்ட சிக்கன் பர்கரை சாப்பிட்ட சஹிதா, ஒரு மணிநேரத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அலர்ஜி காரணமாக மூளை பாதிப்படைந்தால் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் பரிதாபமாக பலியானார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், அலர்ஜி உருவாக்ககூடிய ஏதோ ஒரு கலவை சஹிதா சாப்பிட்ட உணவு பண்டத்தில் கலந்திருத்ததே இறப்பிற்கான காரணம் என தெரிவித்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று வழக்கு விசாரணை நடந்தது.

சஹிதாவின் அக்கா நீதிபதியிடம் அளித்த அறிக்கையில், சிறுவயது முதல் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் சஹிதாக்கு அலர்ஜி ஏற்படுமென்றும் பின்னாட்களில் முட்டை, மீன் ஆகியவையும் அவருக்கு அலர்ஜி ஏற்படுத்தியது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவரது தந்தையும், சிலவயது முதலே சஹிதாவுக்கு இப்பிரச்சனை இருந்து வந்தது, எனவே அவரது தாயார் மிகுந்த கவனத்துடன் சமைத்துக் கொடுப்பார்.

பால் பொருட்களை சஹிதா உட்கொண்டதே இல்லை, உணவகம் சென்றாலும் ஊழியர்களிடம் கேட்டுவிட்டே சாப்பிடுவார் என தெரிவித்துள்ளார்.

சஹிதாவின் அண்ணனும் இதையே கூறியதுடன், அன்றைய தினம் தனக்கு வேலை இருந்ததால் சஹிதாவுடன் செல்லமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தங்கள் உணவுப்பொருள் தரமானது மற்றும் பாதுகாப்பானது என உணவகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்