17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை வழங்க கோரிக்கை: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

லண்டனில் ஆசிட் தாக்குதலில் ஈடுபட்ட 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்துள்ளார்.

டெரிக் ஜான் (17) என்ற சிறுவன் கடந்த யூலை மாதம் 13-ஆம் திகதி லண்டன் சாலையில் ஐந்து பேரின் இரு சக்கர வாகனத்தை திருடும் நோக்கில் அவர்கள் மீது ஆசிட்டை வீசினான்.

இதில் ஐந்து பேருக்கும் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜபித் ஹுசைனின் (33) முகத்தில் ஏற்பட்ட காயம் தற்போது குணமாகிவிட்ட போதிலும் தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவில்லை.

சுவாச கோளாறு பிரச்சனையால் ஹூசைன் இன்னும் தவித்து வருகிறார்.

இந்நிலையில் ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட ஜான் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவன் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

ஜான் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கபட்டுள்ளதாக நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.

ஜானுக்கான தண்டனை விபரம் மார்ச் 9-ஆம் திகதி அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஹூசைன் கூறுகையில், ஜானுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

அவன் 17 வயதான சிறுவன் என்பதால் கருணை காட்டக்கூடாது. ஐந்து பேரின் வாழ்வாதாரத்தை அவன் அழித்து விட்டான்.

இது போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை தான் சரியான தீர்வு என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிட் வீச்சு குற்றத்தில் ஈடுபடும் பெரியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்