65 ஆண்டுகால ரகசியத்தை வெளியிட்ட மகாராணி எலிசபெத்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியா ராணி எலிசபெத் தனது 65 ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களை ஆங்கில தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் ராணியாக திகழும் இவர், ஆட்சி புரிந்து வருபவர்களில் இவரே அதிக வயதானவர் (92) என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் திறந்த மகிழ்ச்சி தருணம் இதோ...

தனது 27 வயதில் 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதியன்று முடிசூட்டிக்கொண்ட ராணி எலிசபெத் எந்நேரமும் தலையில் கிரீடம் இருப்பது அசௌகரியமாகவும் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் பயணம் செய்தது பயங்கரமாக இருந்தது என்பதை நினைவு கூர்ந்தார்.

அனைத்து தகப்பன்மார்களுக்கும் தன் மகள் ராணி தானே, அப்படிப்பட்ட தனது தந்தையை பற்றி கூறுகையில், கடந்த 1936-ஆம் ஆண்டு எனது தந்தை ஜார்ஜ்-VI மகுடம் சூட்டிக் கொண்டபோது எனக்கு 10 வயது. அவர் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு சமதள சவாரி செய்ததை போன்று நானும் செய்ய ஆசைப்பட்டேன் என்று ஆனந்தத்துடன் கூறினார்.

ரதியின் ரத யாத்திரை

நாட்டை நகர்வலம் வரும் ராணிக்கு, கடந்த 1760-ஆம் ஆண்டு தங்க ரதம் அமைக்கப்பட்டது, அதுவே அந்த காலத்தில் அனைத்து பிரிட்டிஷ் மன்னர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இது ஜார்ஜ் IV மன்னராட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராணி எலிசபெத்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்