லண்டனில் இந்திய வியாபாரி அடித்துக் கொலை: தேடப்படும் இளைஞர்களின் புகைப்படம் வெளியீடு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் வியாபாரி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் இருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனில் மில்ஹில் பகுதியில் இந்தியரான விஜய் பட்டேல்(49) என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று 3 சிறார்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன் பொலிசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

எஞ்சிய இரு சிறார்களின் புகைப்படத்தை வெளியிட்ட விசாரணை அதிகாரிகள், தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்தன்று விஜய் பட்டேலின் கடைக்கு வந்த 3 சிறார்கள் சிகரெட் உள்ளிட்ட சில பொருட்களை வாங்க முயன்றுள்ளனர்.

ஆனால் போதிய ஆவணம் இல்லாத காரணத்தால் அவர்கள் வாங்க முயற்சித்த பொருட்களை விஜய் பட்டேல் வழங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறார்கள் மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மட்டுமின்றி கடையை சேதப்படுத்த இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட சிறார்கள் விஜய் பட்டேலின் கை, நெஞ்சு மற்றும் தலை பகுதிகளியில் கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்