அகதி மீது மதுபோதையில் வெறியாட்டம் ஆடிய 12 பேர்: பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் 17 வயதான அகதி ஒருவர் மீது 12 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல் நடத்திய நிலையில் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நாட்டின் லண்டனில் உள்ள குராய்டான் நகரில் உள்ள மதுபான விடுதியிலிருந்து ரேகர் அகமது (17) என்ற குர்திஷ் அகதி கடந்த மார்ச் 31-ஆம் திகதி வெளியேறி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதுபான விடுதியிலிருந்து வெளியேறிய 12 பேர் கொண்ட கும்பல் அகமதை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

பின்னர் அவரை வழிமறித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் படுகாயமடைந்த அகமது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் ரத்த கசிவு, முதுகு எலும்பு முறிவு, மற்றும் முகத்தில் முறிவுகள் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பென் ஹர்மென் (21) பேரி போட்ஸ் (21) ஜாக் வால்டர் (24) ஜார்ஜ் ஜெப்ரி (21) என்ற ஆண்களும், எல்லி லியிட் (19) என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

வழக்கறிஞர் பென் ஹொல்ட் நீதிமன்றத்தில் பேசுகையில், இது நாம் அவமானப்படக்கூடிய மோசமான வன்முறை செயலாகும்.

எந்த நோக்கமும் இல்லாமல் அகமதை இவர்கள் பின் தொடர்ந்து சென்று தாக்கியுள்ளனர்.

இதற்கு காரணம் மது போதையாக இருக்கலாம், அகமதை பிடிக்காமல் போனதாகவும் இருக்கலாம்.

இதில் தொடர்புடைய எல்லோருமே வன்முறையை ஊக்குவிக்கும் செயலில் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஐவரும் மறுத்துள்ள நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்