சொந்த தாயை தேடும் பிரித்தானிய இளைஞன்: 36 வருடங்களின் பின் இலங்கையில் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

அண்மைக்காலமாக வெளிநாடுகளிலுள்ள உள்ள பிள்ளைகள் தமது சொந்த தாயை தேடி இலங்கை வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தற்போது 36 வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி, பிரித்தானியாவிலிருந்து மகன் ஒருவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

36 வயதான ரொஹான் வென்டர் ஹேவ் என்பவரே இவ்வாறு தனது தாயை தேடி இலங்கைக்கு வரவுள்ளார்.

பிரித்தானியாவின் பெல்பாஸ் பகுதியில் வசித்து வரும் ரொஹான், அங்கு புகைப்பட கலைஞரான பனி புரிந்து வருகின்றார்.

தனது இந்திய மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளுடன் அவர் தனது தாயை தேடி இலங்கை வருகின்றார்.

இலங்கையில் பிறந்த அவருக்கு தாயினால் ரோஹித என பெயரிடப்பட்டுள்ளது. 3 மாத குழந்தையாக இருக்கும் போது நெதர்லாந்து நாட்டு தம்பதியினரிடம் தத்துப் பிள்ளையாக கொடுக்கப்பட்டுள்ளார்.

ரோஹானிடம் உள்ள இலங்கை பிறப்பு சான்றிதழுக்கமைய அவரது பெயர் ரோஹித எனவும் அவர் வட கொழும்பு வைத்தியசாலையில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அவரது தாயாரின் பெயர் சிங்கப்புலி கர்டி ரோஹினி எனவும் அவர் 1962ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பிறந்த இடம் மினுவங்கொட எனவும், ரொஹான் பிறக்கும் போது தாயாரின் வயது 20 எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியாவில் பிரபலமான பெண்ணொருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்