அவுஸ்திரேலியாவை சேர்ந்த டாலி என்ற செல்லப்பெயர் கொண்ட Amy Jayne Everette, என்ற 14 வயது சிறுமி ஜனவரி 3 ஆம் திகதி Cyber Bullying எனப்படும் கொடூ கிண்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள்.
இந்நிகழ்ச்சி உலகையே உலுக்கியுள்ள நிலையில் தனது மகளுக்கு வந்த Bullying செய்தி கண்டு ஒரு தாய் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
Queenslandஐச் சேர்ந்த Katrinaவின் மகளுக்கு ஒரு செய்தி வந்தது, அதில் “இவள் ஒரு நாய், இவளால் எல்லோருக்கும் தொந்தரவுதான், இவள் சாகட்டும், இவள் செத்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப் படப்போவதில்லை” என்று எழுதியிருந்தது கண்டு அவர் துடிதுடித்துப்போனார்.
தனது மகள் அடுத்த டாலி ஆகிவிடக்கூடாது என்று முடிவெடுத்த Katrina, உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
தன்னையும் தனது மகளையும் பெரும் கலக்கமடையச் செய்த செய்தியை வெளியிட்ட Sarahah போன்ற மொபைல் Appகள் அனைத்தையும் தடை செய்யக்கோரி ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார்.
App store, Google Play ஆகியவற்றில் கிடைக்கும் Sarahahவை கடுமையாக சாடியுள்ள அவர், Cyber Bullying போன்றவற்றிற்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட இவர்கள் எப்படி இத்தகைய Appகளை அனுமதிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
30,000பேர் கையெழுத்திட்ட புகார் மனு ஒன்றும் பிரதமர் Malcolm Turnbull, Apple, Google மற்றும் Capricornia விற்கான உள்ளூர் உறுப்பினர் Michelle Landryஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாலியின் இரங்கல் கூட்டம் இன்று Katherineஇல் உள்ள Casuarina St Primary Schoolஇல் நடைபெற உள்ளது. பங்குபெறுவோர் அனைவரும் டாலிக்குப் பிடித்த நிறமான நீல நிற உடையில் வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.