கருப்பின பெண் பிரித்தானியாவின் வருங்கால இளவரசியா? மொடல் அழகியின் சர்ச்சைக்குரிய கருத்து

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
501Shares
501Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் கருப்பினத்தவர் பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் மருமகளாவது அந்த குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என மொடல் அழகி Jo Marney கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

UK Independence Party- யின் தலைவராக இருப்பவர் Henry Bolton(54), இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ள நிலையில், தற்போது 25 வயது மொடல் அழகியும், தனது காதலியுமான Jo Marney- யுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மொடல் அழகி Marney சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அமெரிக்காவின் கருப்பினத்தை சேர்ந்த பெண், அரச குடும்பத்தின் மருமகளாவது, அக்குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.

அப்படியென்றால், இளவரசர் ஹரி கருப்பு ராஜா ஆவார். மேலும், நான் கருப்பினத்தவதோடு உறவு கொள்வதை விரும்பமாட்டேன், ஏனெனில் அது எனக்கு அருவருப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

இவரின் இருந்த கருத்தால், கட்சியின் உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தனது காதலி கூறிய கருத்தால் இக்கட்சியின் தலைவரான Henry Bolton- க்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, அதுகுறித்து தற்போது பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவரது காதலியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்