லண்டன் மேயரை கைது செய்ய முயன்ற டிரம்ப் ஆதரவு கும்பல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவில் டிரம்ப் ஆதரவு வலதுசாரி கும்பல் ஒன்று லண்டன் மேயரை கைது செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டன் மேயர் சாதிக் கான் சனிக்கிழமையன்று Fabian Society அரங்கில் உரை நிகழ்த்தவிருந்த போது குறித்தச் சம்பவம் நடந்தது.

இதனையடுத்து பொலிசார் குறித்த கும்பலை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்தனர், இதனால் மேயர் சாதிக் கானின் உரை 15 நிமிடங்கள் தாமதமானது.

மேயர் சாதிக் கான் உரை நிகழ்த்த தயாரான போது டேவி ரஸல் என்ற நபருடன் வந்த 6-7 பேர், வீட்டில் செய்யப்பட்ட தூக்கு மேடையை சக்கரத்தில் கட்டி இழுத்து வந்து மேயரைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமெழுப்பினர்.

மட்டுமின்றி மேயர், பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார், இவருக்கு ட்ரம்ப்பை விமர்சிக்க உரிமையில்லை என்று டேவி ரஸல் கூச்சலிட்டார்.

நாங்கள் இவரைக் கைது செய்யப்போகிறோம் என்று மைக்கில் டேவி ரஸல் அறிவித்ததற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தி விட்டு மேயர் இருக்கையில் அமர்ந்து அமைதி காத்தார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கேட் கிரீன் பொலிசாரிடம் முறையிட, தங்கள் மீது கைவைத்தால் நிலைமை மோசமாகும் என ரஸ்ல் எச்சரித்தார்.

இருப்பினும் பொலிசார் ரஸ்ல் மற்றும் அவருடன் வந்த கும்பலை வலுக்கட்டாயமாக அந்த அரங்கில் இருந்து வெளியேற்றினர்.

டேவி ரஸ்ல் லண்டன் மேயரை துரோகி, ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் வசைபாடியதொடு ஜனாதிபதி ட்ரம்ப்பை மரியாதைக் குறைவாக மேயர் பேசியதாக சாடினர்.

லண்டன் பயங்கரவாதத் தாக்குதலின்போது ஜனாதிபதி ட்ரம்ப், மேயர் சாதிக் கானை குறிப்பிட்டு, “பரிதாபம்” என்று டிவிட்டரில் கிண்டலடித்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்