இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு ஒபாமாவிற்கு அழைப்பு இல்லை: வெளியான தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
228Shares
228Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அழைக்கப்படமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரியும், ஒபாமாவும் நல்ல நண்பர்கள் என்பது பலர் அறிந்ததே. என்றாலும் ஹரியின் திருமணத்திற்கு ஒபாமா அழைக்கப்படமாட்டார்.

இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒபாமாவை அழைத்தால் டிரம்பையும் அழைக்க வேண்டும். ஆனால் திருமணத்திற்கு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

மேலும் டிரம்ப் அதிபராக பதவியேற்றபின் இதுவரை பிரித்தானியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவில்லை. எனவே அவரை திருமணத்திற்கு அழைப்பதில் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன.

எனவே ஒபாமாவும் அழைக்கப்படமாட்டார். ஆனால் ஒபாமாவின் மகள் Malia Obama அழைக்கப்பட உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்