ஒரு மணி நேரம் புலியை பிடிக்க போராடிய காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்காட்லாந்தில் புலியை பிடிக்கச் சென்ற காவலாளிகள் இறுதியில் பொம்மை புலியை பிடித்தது தொடர்பான செய்தி வைரலாக பரவி வருகிறது.

ஸ்காட்லாந்தில் இரவு நேரத்தில் காவல் படையினர் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென்று போன் செய்த நபர் எனது பண்ணையில் புலி ஒன்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனால் காவல் படையினர் உடனடியாக புலியை பிடிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் எடுத்து பண்ணைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருட்டாக இருந்ததால், காவல் படையினர் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு இடத்தில் புலி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரமாக புலியை பிடிப்பதற்கு ஐடியா செய்து அதை பிடிக்க முற்பட்ட போது, புலியின் உடல்களில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் புலியின் பக்கத்தில் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் அவர்கள் பிடித்தது உண்மையான புலி அல்ல, குழந்தைகள் விளையாடக்கூடிய புலி பொம்மை என்பது தெரியவந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்