விற்பனைக்கு வரும் உலகின் அரியவகை வெள்ளை நிற வைரம்

Report Print Athavan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டனில் உள்ள Sotheby எனும் நிறுவனம் அரியவகையான 102.34 காரட் வைரத்தை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டு ஹாங்காங்கில் விற்பனை செய்யப்பட்ட 163 காரட் வைரத்திற்கு அடுத்த படியாக 102.34 காரட் வைரமாக இது திகழ்கிறது.

சிறியதாகவும் மிகவும் நுட்பமாகவும் இந்த வைரம் வெட்டப்பட்டுள்ளதால் மிக பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில் சுமார் 200 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்யபட்ட 163 காரட் வைரமே இதுவரை அதிக தொகைக்கு விற்பனை செய்யபட்ட வைரம் எனும் சாதனையை கொண்டுள்ளது.

இந்த சாதனையை புதிய வைரம் ஆன 102 காரட் வைரம் அடுத்து நடைபெற போகும் ஏலத்தில் முறியடிக்கும் என Sotheby நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வைரத்தின் தன்மையை பரிசோதிக்கும் Gemological Institute of America எனும் சோதனை மையம் 100 காரட் மேல் உள்ள வைரங்களில் இது மிகவும் சிறந்தது எனும் தர சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுவே இந்த வைரத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் வைகையில் அமைந்துள்ளது.

எனினும் வைரத்தின் ஆரம்பகட்ட விலை பற்றிய விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக ஹாங்காங்கில் 163 காரட் வைரத்தையும் விற்பனை செய்ததும் இதே Sotheby நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்