பிரித்தானியாவில் கலக்கிய இந்திய வம்சாவளி சிறுமி: Mathletics Hall of Fame தேர்வில் சாதனை

Report Print Santhan in பிரித்தானியா
244Shares
244Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஹால் ஆப் பேம் என்ற கணக்கு புதிர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் பிறந்த சோஹினி ராய் சவுத்ரி என்ற 8 வயது சிறுமி தமது குடும்பத்துடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் நடைபெற்ற Mathletics Hall of Fame தேர்வில் சோஹினி ராய் சவுத்ரி பங்கேற்றார்.

இதில் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாம தேர்வில் பங்கேற்பர்.

இதைத் தொடர்ந்து அதில் கேட்கப்பட்ட கணக்குப் புதிர்களுக்கு விரைவாகவும், மிகச் சரியாகவும் பதிலளித்த சோஹினி முதல் 100 இடங்களுக்கு இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து சோஹினி கூறுகையில், Mathletics Hall of Fame போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்