47 நாட்களாக மலம் கழிக்க மறுத்த பிரித்தானியருக்கு நேர்ந்த கதி: பொலிசார் நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் ஒருவர் தொடர்ந்து 47 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வந்த நிலையில் பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பிரித்தானியாவின் ஹார்லோ, எசெக்ஸ் பகுதியில் இருந்து போதை மருந்து கடத்தல் தொடர்பில் 24 வயதான லாமர் சாம்பர் என்ற இளைஞரை கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதை மருந்து உருளைகளை முழுங்கியதாக பொலிசார் திட்டவட்டமாக நம்பிய நிலையில், குறித்த இளைஞரை மலம் கழிக்க வைக்க எசெக்ஸ் பொலிசார் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் பொலிசாரின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்த நிலையில், சாம்பரின் உடல் நிலை மிகவும் மோசமாக துவங்கியது.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு 38 நாட்கள் கடந்த நிலையில், மலம் கழிப்பதைவிட தமது கட்சிக்காரர் உயிர்விட தயாராக இருக்கிறார் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்களன்று பொலிசார் அவரை விடுவித்துள்ளனர்.

இதனால் அவரை பொலிஸ் வாகனத்தில் மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். 47 நாட்கள் தொடர்ந்து மலம் கழிக்க மறுத்து வந்ததால் குறித்த இளைஞரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்தே பொலிசார் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து விடுவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்