நெக்லசால் லண்டன் விமானநிலையத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை: வருத்ததுடன் சென்றதாக குமுறல்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டன் விமானநிலையத்தில் பெண் ஒருவர் அணிந்திருந்த நெக்லஸ் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

laire Sharp (46) என்ற பெண் தன் இரண்டாவது கணவர் மற்றும் 12 வயது மகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் London Stansted விமானநிலையத்தில் இருந்து இத்தாலி செல்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கிருக்கும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த நெக்லசில் துப்பாக்கி போன்று இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பின் அவர்கள் இதை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் அல்லது இங்கே கொடுத்துவிட்டு செல்லுங்கள், நீங்கள் திரும்பி வரும் போது பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவரோ இது என்னுடைய முதல் கணவர் வாங்கிக் கொடுத்தது, அவர் கடந்த 2001-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் ஞாபகார்த்தமாக இருப்பது இது மட்டுமே, இது எப்போது என்னுடன் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இருந்த போதிலும் பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என்று அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து அவர் விமானநிலையத்தில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில், என் கணவரின் நியபமாக அதை எப்போதும் அணிந்திருப்பேன், தற்போது இதை பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது.

அதுமட்டுமின்றி இதை நான் திரும்ப வரும் பெற்று கொள்ளும் போது, அதை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கு என்று 8 பவுண்ட வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்