லண்டனில் அதிகாலையில் இளைஞரை சுட்டுத் தள்ளிய மர்ம நபர்: தேடி வரும் பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டனில் இளைஞர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Wood Green பகுதியில் இருக்கும் Vue cinema-விற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை காலை 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் நின்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக ஒருநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் பின் சிகிச்சை பலின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் இரண்டு பேருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை எனவும் இருந்த போதிலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம், அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்ததால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்