முன்னாள் உளவாளி மீது பிரிட்டனில் நச்சு தாக்குதலா? பதிலளித்த ரஷ்யா

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் வசித்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மீது ரஷ்யா நச்சு தாக்குதல் நிகழ்ச்சியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் செர்கெய் ஸ்க்ரிபால் (66), இவர் கடந்த 1990-களில் அந்நாட்டு ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.

அப்போது பிரித்தானியா உளவு பரிவிலும் ரகசியாக இணைந்த அவர் ரஷ்யா உளவு துறையில் பணியாற்றும் வாய்ப்பை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு ரகசிய தகவல்களை அளித்தார். இதை கடந்த 2004-ல் கண்டுப்பிடித்த ரஷ்ய அதிகாரிகள் செர்கெயை கைது செய்தனர்.

இதையடுத்து தேச துரோக வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் செர்கெய்க்கும் மேலும் இரு கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

அங்குள்ள வில்ட்ஷைர் மாகாணத்தில் மகள் யுலியா (33)-வுடன் செர்கெய் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறுயன்று அங்குள்ள பூங்காவில், செர்கெயும், யுலியாவும் மயங்கி கிடந்தனர்.

அவர்கள் மீது நச்சுப் பொருட்கள் செலுத்தப்பட்டதன் காரணமாக உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்த செயலை செய்தது ரஷ்யா தான் என பிரித்தானியா ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள்.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறுகையில், உலகில் எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு ரஷ்யா தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

செர்கெய் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை, பதற்றத்தை அதிகரிக்க இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்