பிரித்தானியாவில் அதிகாரிகளை ஏமாற்றும் அகதிகள்: வெளியான ஆய்வறிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
572Shares
572Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் குழந்தை அகதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏமாற்றுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு ஆண்டில் மட்டும், தங்களை குழந்தை அகதிகள் என்று கூறுபவர்களை மதிப்பாய்வு செய்ததில் அவர்களில் 65 சதவிகிதத்தினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், உடன் பெரியவர்கள் யாரும் இல்லாத குழந்தைகள் 2,952 பேரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் உள்துறை அலுவலகத்துக்கு வந்தன. அவற்றில் 705 விண்ணப்பங்களில் வயது பிரச்சினைகள் இருந்தன. அதாவது விண்ணப்பித்தவர்களில் கால் வாசிப்பேர் பொய்யான வயதைக் கூறுவதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் 618 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது அவர்களில் 65 சதவிகிதம்பேர், 402 பேர் பெரியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

போர், தீவிரவாதம் மற்றும் மனித சமுதாயப் பேரழிவுகள் ஆகியவற்றின் விளைவாக பாதிக்கப்படும் குழந்தைகள்மீதான பிரித்தானியாவின் பெருந்தன்மை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கருதப்படும் நேரத்தில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்வளவு ஏமாற்று வேலைகள் நடக்கும் நிலையிலும் பிரித்தானியா அகதிகளை மனிதாபிமானத்துடனேயே நடத்துகிறது.

பல நாடுகள் மனிதர்களின் வயதைக் கண்டறிவதற்கு மிருகங்களை சோதிப்பது போல் சோதிக்கும் நிலையில் பிரித்தானியா, Ireland மற்றும் Cyprus ஆகிய நாடுகள் மட்டும் அவ்வாறு செய்வதில்லை.

மற்ற நாடுகள் அனைத்தும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் மன நல மருத்துவர்கள் ஆகியோரின் உதவியுடன் வயது குறைந்தவர்கள் போல ஏமாற்றுபவர்களை கண்டறிய முற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்