ரயில் டிக்கெட் விலை அதிகம்! காரையே புதிதாக வாங்கிய பிரித்தானியர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
219Shares
219Shares
lankasrimarket.com

London-லிருந்து Bristol உள்ள தனது நண்பரைக் காண்பதற்காக ரயிலில் செல்ல முடிவு செய்த Tom Church ரயில் டிக்கெட் விலையைக் கேட்டதும் அதிர்ந்துபோய் கார் ஒன்றை பழைய விலைக்கு வாங்கி பயணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

லண்டனை சேர்ந்தவர் Tom Church, Bristol-உள்ள தனது நண்பரை பார்க்க முடிவெடுத்தார், ரயிலில் பயணம் செய்யலாம் என முடிவெடுத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் விலை, ஏற்கனவே ரயிலில் பயணம் செய்த ஒருவரும் சமூக ஊடகம் ஒன்றில் ரயில் டிக்கெட்டின் விலை குறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

அவரது வலி தனக்கும் புரிவதாக கூறியுள்ள Tom Church வித்தியாசமாக எதையாவது செய்ய நினைத்தார்.

எனவே காரில் பயணம் செய்ய முடிவெடுத்து, 80 பவுண்டுகளுக்கு பழைய காரை வாங்கினாராம்.

சாலை வரி, இன்சூரன்ஸ், பெட்ரோல் அனைத்திற்கும் சேர்த்து அவர் செலவழித்தது 206.81 பவுண்டுகள்.

ரயில் டிக்கெட்டின் விலையோ 218.10 பவுண்டுகள், ஆக அவருக்கு லாபம் 11 பவுண்டுகள்.

ரயில் டிக்கெட் வாங்கினால் போன பணம் போனதுதான், ஆனால் எனக்கோ ஒரு கார் கிடைத்துள்ளது. அப்படிப்பார்த்தால் எனக்கு 200 பவுண்டுகள் லாபம் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்