பிரித்தானிய இளவரசர் ஹரி, காமன்வெல்த் கூட்டமைப்பின் இளம் தூதராக நியமிக்கப்படுவதாக பிரித்தானிய ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி(33), அமெரிக்க நடிகையான மார்க்லேவை அடுத்த மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்ய உள்ளார்.
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹரியை, ராணி எலிசபெத் நியமித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘காமன்வெல்த் நாடுகளில் 30 வயதுக்கும் குறைவானவர்கள் 2.4 பில்லியன் பேர் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹரி செயல்படுவார்.
சமூக, பொருளாதார மற்றும் இயற்கை சவால்களை சந்திக்கும் வகையில் இளம் சமூகத்தினரை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
