லண்டனில் இளைஞர் மீது ஆசிட் வீச்சு: புழுவாய் துடித்தவரை மீட்ட பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இளைஞர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் வடபகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட நபரை அணுகிய 2 மர்ம நபர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆசிட் போத்தலை எடுத்து அவர் முகத்தின் மீது வீசியுள்ளனர்.

இதில் முகம் வெந்து போன அந்த நபர் துடித்துப்போயுள்ளார். பின்னர் அருகாமையில் இருந்த Kwik Fit-குள் நுழைந்து தண்ணீர் வேண்டும் எனக் கேட்டு கென்சியுள்ளார்.

அப்போது குறித்த கடைகிகுள் இருந்த Binesh Katia என்ற நபர் அவர் மீது தண்ணீரை மொண்டு ஊற்றியுள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே குறித்த இளைஞரை கழிவறைக்கு அழைத்துச் சென்று மேலும் தண்ணீர் விட்டு முழுமையாக கழுவி சுத்தம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை குழுவினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பிரித்தானியாவில் சமீப காலமாக வாள்வெட்டு சம்பவம், துப்பாக்கி சூடு மற்றும் ஆசிட் வீச்சு என தொடர்ந்து வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு 64 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். குறித்த வழக்குகளில் தொடர்புடைய சிலர் மட்டுமே கைதாகியுள்ள நிலையில், பல வழக்குகள் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கியுள்ளது.

இருப்பினும் பெருநகர பொலிசார் மற்றும் லண்டன் மேயர் சாதிக் கான் ஆகியோர் குறித்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்