கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த இரண்டு பிரித்தானியார்கள் விடுவிப்பு: புகைப்படம் வெளியாகியது

Report Print Santhan in பிரித்தானியா
76Shares
76Shares
lankasrimarket.com

கான்கோவில் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு பிரித்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Congo-வில் உள்ள Virunga சர்வதேச பூங்காவிற்கு இரண்டு பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் பெண் வனத்துறை பாதுகாப்பு அதிகாரியுடன் சென்றிருந்தனர்.

அப்போது மாய்மாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றிருந்தனர். இதில் உடன் சென்ற பாதுகாப்பு பெண் அதிகாரியை அவர்கள் கொன்றுவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்திருக்கும் அவர்கள் 2,00,000 அமெரிக்க டொலர் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரித்தானியர்களையும் கொள்ளையர்கள் எந்த ஒரு காயமுமின்றி விடுவித்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், கடத்தப்பட்ட இரண்டு பிரித்தானியா சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு கடந்த ஞாயிற்று கிழமை எந்த வித காயமுமின்றி பத்திரமாக மீட்டுத் தந்துள்ளதாகவும், அவர்களின் பெயர் Bethan Davies மற்றும் Robert Jesty என்று கூறி அவர்கள் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ஆனால் இவர்கள் சென்ற காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு மட்டும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெரிதும் முயற்சி எடுத்து எங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காங்கோ அரசாங்கத்து நன்றி தெரிவித்து கொள்வதாக பிரித்தானியா தூதர் John Murton தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்கள் கொள்ளையர்களிடமிருந்து எப்படி மீட்டார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்