ரசிகர்கள் மனங்களைக் கொள்ளையடித்த பிரித்தானிய கால் பந்தாட்ட வீரரின் மகள்: மனதைக் கவரும் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் லிவர்பூல் கால்பந்து வீரரான மொஹமத் சலாவின் மகள் அப்பாவின் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடிக்கும் ஒரு அருமையான வீடியோ வெளியாகியுள்ளது.

மொஹமத் சலா அதிக கோல்களை அடித்ததற்கான விருதைப் பெற்று அதற்காக புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது அவரது மகள் மக்கா மொஹ்மத் கால்பந்தை கால்களால் உதைக்க ஆரம்பித்தாள்.

அவள் ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் மைதானத்தில் கூடியிருந்த கூட்டம் உற்சாகக் குரல் எழுப்பியது.

தனக்காக ரசிகர் பட்டாளமே குரல் எழுப்புவதைக் கண்டு உற்சாகமடைந்த மக்கா மேலும் மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் மகளிடம் வந்த சலா ஒரு முறை தன்னிடம் மகள் அடித்த பந்தை உதைக்காமல் தன்னிடமே வைத்துக்கொள்ள மைதானமே பொய்க்கோபத்தில் பூ எனக் கத்தியது.

இத்தனை வருடங்களாக சலாவின் ரசிகர்களாக இருந்தவர்களை ஒரு நொடியில் கவர்ந்துகொண்டாள் மக்கா.

உடனே மன்னிப்புக் கோரும் வகையில் தனது இரண்டு கைகளையும் உயர்த்திய சலா மகளை தொடர்ந்து விளையாட அனுமதித்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மீண்டும் மக்கா பந்தை உதைக்க ஒவ்வொரு உதைக்கும் மீண்டும் உற்சாகக் குரல் எழுப்பத் தொடங்கியது கூட்டம்.

அவள் விளையாட மக்கள் குரலெழுப்ப, அந்த வீடியோவைக் காணும்போது நம் உள்ளத்தையும் கொள்ளையடித்துவிடுகிறாள் மக்கா.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்