திருமண நேரத்தில் இப்படியா? வெளியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
659Shares
659Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மெர்க்கல் ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கவர்ச்சிகரமான வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.

ராஜ குடும்பத்திற்கு மேகன் பொருத்தமற்றவர், அவரைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று மெர்க்கலின் சகோதரரே இளவரசர் ஹரிக்கு ஒரு பக்கம் கடிதம் எழுத, இன்னொரு பக்கம் மெர்க்கல் அவரது குடும்பத்தை திருமணத்திற்கு அழைக்காதது சரிதான், அந்த குடும்பம் அப்படிப்பட்ட குடும்பம் என்று பத்திரிகைகள் புழுதியை வாரி இறைக்க இந்த நிலையில் இப்படி ஒரு கவர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கவர்ச்சிகரமான உடையணிந்துள்ள மெர்க்கல் ஒரு "Typical" நடிகையாக போஸ் கொடுத்து பர்கர் ஒன்றை செய்து உண்பதுபோல் காட்சி வெளியாகியுள்ளது.

Men's Health என்னும் முழுமையான ஆண்களுக்கான அமெரிக்க பத்திரிகைக்காக அவர் அந்த புகைப்பட ஷூட்டை செய்துள்ளார்.

“முற்றிலும் ஆண்களுக்கான பெண்” என மேகன் மெர்க்கலை அந்த பத்திரிகை வர்ணித்திருந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்