மூன்று தலைமுறைகளாக பிரித்தானிய அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கும் இந்தியர்கள்: சுவாரசிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
387Shares
387Shares
lankasrimarket.com

மும்பையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானிய இளவரசர் திருமணத்தில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றுள்ள நிலையில் இது அவர்களின் குடும்ப பாரம்பரியம் என தெரியவந்துள்ளது.

ஆலன் மற்றும் பியன்சா தம்பதிக்கு ஹைடன் (10) என்ற மகன் உள்ளான்.

இவர்கள் குடும்பத்துக்கு பிரித்தானியா ராஜ குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும், ஆலனின் பெற்றோர் கடந்த 1981-ல் நடைபெற்ற இளவரசி டயானா, இளவரசர் சார்லஸ் திருமணத்தை காண இந்தியாவிலிருந்து லண்டனுக்கு சென்றுள்ளார்கள்.

அதே போல சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமண நிகழ்வுக்காக ஆலன் குடும்பம் லண்டனில் தற்போது முகாமிட்டுள்ளது.

இது குறித்து கூறிய ஆலன், எங்கள் வேலை பளு காரணமாக 2011-ல் நடைபெற்ற இளவரசர் வில்லியம் - கேட் திருமணத்தை மிஸ் செய்துவிட்டோம்.

ஆனால் இளவரசர் ஹரி திருமண நிகழ்வுக்கு சரியாக வந்துவிட்டோம், எங்கள் மகன் ஹைடனும் தற்போது இதன் காரணமாக உற்சாகமாக உள்ளான்.

இது வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இதை மிஸ் செய்ய விரும்பவில்லை.

திருமணத்துக்கு பின்னர் இளவரசரும், இளவரசியும் வீதி உலா வருவதை பார்க்க ஆவலாக உள்ளோம், சரியான இடத்தில் நிற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

வருங்காலத்தில் குட்டி இளவரசர் ஜார்ஜ் திருமண நிகழ்வுக்கு தங்கள் மகன் ஹைடன் செல்ல வேண்டும் என்பது ஆலன் - பியான்சா தம்பதியின் விருப்பமாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்