மீண்டும் மிக முக்கிய நிகழ்வில் ராஜ மரபை மீறிய மேகன் மெர்க்கல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1095Shares
1095Shares
lankasrimarket.com

ராஜ குடும்ப மரபுகளை மீறுவதையே தனது வழக்கமாக்கிக் கொண்டுள்ள மேகன் மெர்க்கல், மீண்டும் ஒரு முறை மிக முக்கிய நிகழ்வான Trooping the Colour நிகழ்ச்சியில் மரபை மீறியுள்ளார்.

ராஜ குடும்ப பெண்கள் தங்கள் தோள்களை வெளியே காட்டக்கூடாது என்பது ராஜ குடும்ப மரபு.

ஆனால் Trooping the Colour நிகழ்ச்சி மற்றும் தான் முதன்முறையாக பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் தோன்றும் நிகழ்வுகள் ஆகிய இரண்டும் ஒருமிக்க நடக்கும் இந்த முக்கியமான நாளில் மேகன் மெர்க்கல் ராஜ மரபை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குதிரைகள் இழுக்கும் ரதம் ஒன்றில் தனது கணவர் இளவரசர் ஹரியுடன் வந்த மேகன் மெர்க்கல் பிங்க் நிற உடையில் ஒரு “டிப்பிக்கல்” நவ யுக இளவரசியாக பவனி வந்தார்.

அழகு தேவதையாக அவர் வலம் வந்தாலும் அவரது உடை தோள்கள் வெளியில் தெரியும் வண்ணம் அமைந்ததினிமித்தம் அவர் ராஜ மரபை மீறியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான நாளிலும் மரபை மீறியுள்ள மேகனின் செயலைப் பார்க்கும்போது அவர்தான் அவர் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பார் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்