பிரித்தானியாவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பரபரப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

வடகிழக்கு பிரித்தானியாவில் சனிக்கிழமை இரவு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு வல்லுனர்கள் உறுதி செய்துள்ள நிலையில் வீடுகள் குலுங்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கமானது 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Grimsby நகர் அருகில் இது அதிகம் உணரப்பட்டதாகவும் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியை இது பாதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது 18 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையில் Lincolnshire மற்றும் Yorkshire பகுதி மக்கள் சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் ஐந்து வினாடிகள் வரை நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூகவலைதளத்தில் கூறியுள்ளனர்.

இதோடு வீடுகள் சிறியளவில் குலுங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்