என் அம்மாவை கத்தியால் குத்திட்டான்! பிரித்தானியாவில் இரத்தக்கரையுடன் வீதியில் கதறி அழுத சிறுமி

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் தன் அம்மாவை காப்பாற்ற வீதியில் சிறுமி ஒருவர் ரத்தக் கரையுடன் கதறி அழுதுள்ளார்.

பிரித்தானியாவின் Louth நகரத்தில் Lincolnshire பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் மர்ம நபர், வீட்டிலிருந்த Marie Gibson (35) என்ற பெண்ணை கத்தியால் பல முறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் குறித்த பகுதிக்கு ஆம்புலன்சுடன் விரைவாக சென்றுள்ளனர். இருப்பினும் அந்த பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், 27 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்த வீட்டின் அருகில் இருந்தவர் கூறுகையில், சம்பவ தினத்தின் போது அந்த பெண்ணின் 4 வயது மகள் உடலில் ரத்தக் கரை படிந்த நிலையில், வீதிக்கு ஓடி வந்து என் அம்மாவை கத்தியால் குத்திட்டான் காப்பாற்ற வாங்க என்று கதறி அழுதாள்.

மற்றொருவர் கூறுகையில், சிறுமி ஒருவர் வீதியில் காப்பாற்ற வாங்க..காப்பாற்ற வாங்க என்று கத்தினாள் என்று கூறியுள்ளார்.

இன்னொருவரோ, ஏதோ வீட்டுக்கு வெளியில் தொடர்ந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றேன். அப்போது சிறுமி உடல் முழுவதும் ரத்தகரையுடன் காப்பாற்ற வாங்க என்று கத்திக் கொண்டிருந்தாள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்