இளவரசி டயானாவை இன்னொரு முறை கண்முன் கொண்டு வந்த கேட் செய்த விடயம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

1989 ஆம் ஆண்டு உலக மக்களின் இளவரசி டயானா தனது மகனின் பள்ளியில் நடைபெற்ற தாய்மார்களுக்கான ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற போது கூடியிருந்த மக்கள் எழுப்பிய சத்தம் விண்ணையே அதிரச் செய்தது.

இன்று அவரது மருமகள் தனது பிள்ளைகளுடன் நடத்திய ஓட்டப்பந்தயம் இளவரசி டயானாவை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தியது.

ஒரு இளவரசி என்பதையே மறந்து ஒரு சாதாரண பெண்ணாக, ஒரு அன்புத் தாயாக ஒரு குழந்தைபோல் அவர் ஓடி விளையாடிய காட்சிகள் மனதை தொடுகின்றன.

தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக போலோ விளையாட்டு ஒன்றில் பங்கேற்ற இளவரசர் வில்லியமுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இளவரசி கேட் அவரது இரண்டு பிள்ளைகளான குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லட் ஆகியோர் விளையாட்டு மைதானத்திற்கு திடீர் வருகை தந்தனர்.

அங்கு தனது பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக தான் ஒரு இளவரசி என்ற எண்ணம் சிறிதும் இன்றி குழந்தைகளோடு குழந்தையாக இளவரசி கேட் ஓடி விளையாடிய காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்