பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு இன்று பெயர் சூட்டு விழா

Report Print Vijay Amburore in பிரித்தானியா
250Shares
250Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதியின் மூன்றாவது மகன் லூயிஸ்க்கு இன்று பெயர் சூட்டு விழா (ஞானஸ்தானம்) நடைபெறவுள்ளது.

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பேரனான இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 23-ம் திகதி Paddington-ல் உள்ள St Mary's Hospital-ல் ஆண்குழந்தை பிறந்தது.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஜார்ஜ் (4) என்ற ஆண் குழந்தையும், சார்லெட் (2) என்ற பெண் குழந்தையும் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை, செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெறும் விழா ஒன்றில் குட்டி இளவரசருக்கு பெயர் சூட்டப்படவுள்ளது.

இந்த விழாவில் அரச குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.

கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, புனித நீரை குட்டி இளவரசரின் தலையில் ஊற்றி பெயர் சூட்டவுள்ளார், இந்த நிகழ்வு தனக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை குறைபாடு காரணமாக, 92 வயதாகும் மகாராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் (97) தங்களது 7-வது கொள்ளுப்பேரன் லூயிஸின் பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லூயிஸ் சகோதரர் ஜார்ச்-க்கு கடந்த 2013-ம் ஆண்டு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையிலும், சகோதரி சார்லெட்க்கு கடந்த 2015-ம் ஆண்டு Queen's Sandringham-ல் உள்ள செயின்ட் மேரி மக்டலேனே தேவாலயத்திலும் ஞானஸ்தானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்