குட்டி இளவரசருக்கு இளவரசர் ஹரி வழங்கிய சூப்பரான பரிசு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
827Shares
827Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியின் மூன்றாவது மகன் லூயிஸ்க்கு இன்று பெயர் சூட்டும் விழா லண்டனில் உள்ள St James's Palace இல் நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டனர். மகாராணி மற்றும் அவரது கணவர் பிலிப் ஆகிய இருவரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.

குட்டி இளவரசரின் பெயர் சூட்டும் விழாவுக்கு இளவரசர் ஹரி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த புத்தகத்தின் பெயர் Winnie the Pooh. A.A. Milne பதிப்பின் முதல் பதிப்பு தான் இந்த புத்தகம்.

இந்த புத்தகம் கற்பனை கதாபாத்திரங்கள் மற்றும் டிஸ்னி மீடியா உரிமையை கொண்டது. சிறு வயது குழந்தைகளை கவரும் இந்த புத்தம் நிச்சயம் குட்டி இளவரசருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக இளவரசர் ஹரி இதனை பரிசாக அளித்துள்ளார்.

இந்த புத்தகத்தின் விலை £8,000 பவுண்ட்ஸ் ஆகும்.

தற்போது, 11 வார குழந்தையாக இருக்கும் குட்டி இளவரசர் வளர்ந்த பிறகு அவரது நூலகத்தை அலங்கரிக்கும் முதல் புத்தமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்