112 அடி உயரத்திலிருந்து குட்டையில் குதித்த நபருக்கு நேர்ந்த கதி: திக் திக் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா
147Shares
147Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் 112 அடி உயரமுள்ள குட்டையில் சாகசம் செய்ய விரும்பி குதித்த நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ரயன் சைமன்ஸ்கி என்பவர் அங்குள்ள குவாரி குட்டையில் குதித்து சாகசம் செய்ய விரும்பினார்.

இதையடுத்து தனது நண்பர்களுடன் குறித்த குட்டைக்கு ரயன் சென்ற நிலையில் 112 அடி உயரத்தில் இருந்து குட்டையில் ஆரவாரமாக குதித்தார்.

ஆனால் ரயனின் சாகச முயற்சி சோகத்தில் முடிந்தது. அதாவது, குட்டையில் குதிக்கும் போது அவரது வலது முழங்கால் தண்ணீரில் வேகமாக மோதியது. இதில் முழங்கால் பெயர்ந்து வலியால் துடித்த அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்