கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து! பிரித்தானியா இளவரசர் உருக்கம்

Report Print Santhan in பிரித்தானியா
906Shares
906Shares
lankasrimarket.com

குரோசியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த போதும் அணியை நினைத்து பெருமைப்படுவதாக பிரித்தானியா இளவரசர் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றிருந்ததால், இன்றைய இங்கிலாந்து-குரோசியா அணிகளில் யார் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மோதப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

குரோசியா வீரர் மாரியோ மாண்ட்சிக் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோல் அடித்து தன் நாட்டு அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அதே சமயம் இறுதிப் போட்டிக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானியா இளவரசர் வில்லியம் Kensington Palace டுவிட்டர் பக்கத்தில், இந்த தோல்வி உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

அதை என்னால் உணர முடியும், ஆனால் அதே சமயம் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

இது ஒரு அற்புதமான உலகக்கிண்ணப் போட்டி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தீர்கள், இன்னும் மேலும் பல வெற்றிகள் பெற்றுக் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்