ட்ரம்பிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெற உள்ள மாபெரும் போராட்டம்: ஏராளமான பொலிஸார் குவிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா
149Shares
149Shares
lankasrimarket.com

இரண்டு நாள் பயணமாக இன்று பிரித்தானியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக, பிரித்தானியாவை சேர்ந்த பொதுமக்கள் பலரும் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக பதியேற்றதற்கு பிறகு டொனால்ட் ட்ரம்ப், முதன்முறையாக இரண்டு நாட்கள் பயணமாக பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ராணி எலிசபெத்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் விதமாக சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கு தொழிலதிபர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு காணப்பட்டாலும், பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் அவர் வகுத்துள்ள குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் இத்தகைய போராட்டங்களை மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ள ட்ரம்பிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தினை பொதுமக்களால் முன்ன்னேடுக்க உள்ள நிலையில், ஏராளமான ஸ்காட்லாந்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரித்தானிய தெருக்களில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்