லண்டனுக்கு வருகை தந்த டிரம்ப்பை நடுவிரல் காட்டி அசிங்கப்படுத்திய நபர்: வெளியான வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
496Shares
496Shares
lankasrimarket.com

அமெரிக்கா ஜனாதிபதியான பின்பு டொனால்ட் டிரம்ப் தன்னுடைய மனைவியான மெலானியா டிரம்புடன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்.

டிரம்பின் வருகையின் காரணமாக பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் லண்டனில் டிரம்ப் காரில் சென்ற போது நபர் ஒருவர் நடுவிரலை காண்பித்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், டிரம்ப் இன்று தன்னுடைய காரில் லண்டனின் Camden பகுதியில் இருக்கும் Sainsbo’s பேருந்து நிலையத்தை கடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தன்னுடைய நடுவிரலை காண்பித்து அவருக்கு சல்யூட் அடிப்பது போன்று செய்துள்ளார்.

இந்த வீடியோவை Miguel Santana da Silva என்ற நபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்தவரான இவர் தற்போது பிரித்தானியாவில் வசித்துவருவதாகவு உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்