பிரித்தானியா மகாராணியின் மானுக்கு நேர்ந்த கதி: சிக்கியவர்களின் தலைவிதி என்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
415Shares
415Shares
Nallur-Travels-August-Promotion

பிரித்தானிய மகாராணியின் மான் ஒன்றை கொன்றதாக நான்கு பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Windsor Castleக்கு சில நூறு அடிகள் தொலைவில் ஒரு மானைக் கொன்றதாக சுமார் 13 வயதுடைய நான்கு பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சிறுவர்களின் இரண்டு நாய்கள் அந்த மானைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஒரு பிரகாசமான லைட்டை மானின் முகத்தில் விழச் செய்து, அது அதிர்ந்து நிற்கும் நேரத்தில் அதனை நாய்களை விட்டுக் கொல்லச் செய்வது ஒரு வேட்டையாடும் முறை.

இந்த முறையைப் பயன்படுத்தித்தான் அந்த சிறுவர்கள் மகாராணியின் மானைக் கொன்றிருக்கிறார்கள்.

Great Windsor Park பகுதியிலுள்ள அனைத்து காட்டு விலங்குகளும் மகாராணியின் சொத்தாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமபவம் நடந்தபோது மகாராணியார் Windsorஇல் இருந்தாரா என்பது குறித்து தகவல் இல்லை.

தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ள அந்த சிறுவர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்