ஜன்னல் வழியாக வீசிவிடுவேன்: 3 வயது குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
355Shares
355Shares
lankasrimarket.com

விமானம் புறப்படும்போது குழந்தை அழுத காரணத்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர்கள் அக்குடும்பத்தை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

லண்டனில் இருந்து பெர்லின் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் இருந்த இந்திய தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தைக்கு சீட் பெல்ட் அணிவிக்க முற்படுகையில் அக்குழந்தை அழுதுள்ளது.

எனவே குழந்தையின் தாய் சீட் பெல்டை கழற்றி குழந்தையை தனது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது.

அங்கிருந்து வந்த விமான பணிக்குழுவை சேர்ந்த ஆண் ஒருவர் குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். போய் உன் இருக்கையில் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர், இனபாகுபாடு காட்டி, அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும், காவலர்களை வரவழைத்து குடும்பத்தினரை விமானத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது இந்த புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

எந்தவிதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்