உன்னிடம் வருகிறேன் அம்மா: உயிரை விட்ட பிரபல கால்பந்து வீரரின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா
375Shares
375Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் உள்ளூர் கால்பந்து அணி வீரர் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் இறப்பதற்கு முன்னர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Carmarthen Stars கால்பந்து அணிக்காக விளையாடி வந்த பிரண்டன் ஹோல்டர் (24) என்ற கால்பந்து வீரர் தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பிரண்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள், நான் சிறந்த நண்பனாகவும், மகனாகவும் இல்லை.

அம்மா உன்னிடம் வருகிறேன், உன்னை எப்போது பார்ப்பேன் என உள்ளது, போய் வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பின்னர் தாயுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை பிரண்டன் வெளியிட்டார்.

பிரண்டனின் சகோதரர் ஜேமி கூறுகையில், அன்பாகவும், தைரியமாகவும் பிரண்டன் இருப்பார், அவரை அதிகம் மிஸ் செய்வேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் பிரண்டனின் மரணத்தில் சந்தேகப்படும்படியான விடயங்கள் எதுவும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்