முதன் முறையாக தாயின் குரல் கேட்டு குழந்தை கொடுத்த ரியாக்சன்! நெகிழ்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா
339Shares
339Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தை, முதன்முறையாக தாயின் குரல் கேட்டு, முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளை கொடுக்கும் வீடியோ காண்போர் கண்களை கலங்க வைக்கிறது.

பிரித்தானியாவின் Liverpool-ல் பகுதியை சேர்ந்தவர் Jen Denman. பிறந்தது முதலே இவருடைய குழந்தைக்கு செவித்திறனில் குறைபாடு இருந்துள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய மகன் Alex Denman-ன் சைகையின் வழியே பேசியுள்ளனர்.

தற்போது 5 மாதமாகும் Alex-ற்கு காது கேட்கும் கருவியை பொருத்துவதற்கான வேலைகளை அவரது தாயார் மேற்கொண்டார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, Alder Hey குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைக்கு கருவி பொருத்தப்பட்டது.

அப்போது அவனுடைய தாய், "ஹெலோ நான் அம்மா" என கூறியதும், வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு முகபாவனையை கொடுத்துள்ளான். இதனை வீடியோவாக படம்பிடித்த மருத்துவமனை நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

காண்போர் கண்களை கலங்கடிக்கும் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் 800,000 பார்வையாளர்களை பெற்று விட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்