பிரித்தானியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! நடுத்தெருவில் ஐந்து வயது குழந்தை இருக்கும் காரை அடித்து நொறுக்கிய கும்பல்

Report Print Santhan in பிரித்தானியா
619Shares
619Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் விலையுயர்ந்த பிஎம்டபில்யூ காரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பேஸ் பேட்டை கொண்டு அடிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Lancashire பகுதியின் Blackburn-ல் உள்ள Queen's Park சாலையில் நேற்று மாலை ஒரு சில்வர் நிற BMW கார் ஒன்று சென்றுள்ளது.

அப்போது திடீரென்று அந்த காரை ஐந்து பேர் கொண்ட முக முடி அணிந்த கும்பல், தங்கள் கையில் வைத்திருந்த பேஸ் பால் பேட்டை வைத்து அடிக்கின்றனர்.

இதில் ஒரு நபர் காரின் முன்பக்கத்தில் உள்ள கண்ணாடியை கொடூரமாக பேட்டை வைத்து அடிக்கிறார். இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி தாக்கப்பட்ட அந்த காரின் உள்ளே 5 வயது குழந்தை இருந்ததாகவும், குழந்தை மற்றும் கார் டிரைவருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்