அமெரிக்காவில் இன வெறியால் 9 பேர் சுட்டுக்கொலை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் தேவாலயத்தில் கறுப்பினத்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினா மாகாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு தேவாலயத்தினுள் நுழைந்த வெள்ளையினத்தை சேர்ந்த டிலான் ரூப் என்ற இளைஞர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த, 9 கறுப்பினத்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

தேவாலயத்திற்குள் வந்த அந்த நபர் சுமார் 45 நிமிடங்கள் மற்றவர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்த போது டிலான் ரூப் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த கறுப்பினத்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான‌ குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றது. டிலான் ரூப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எவ்வாறு நிகழ்த்தினேன் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுமார் மூன்று மணி நேரம் விவாதித்த பிறகு அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments