எங்களை வாழ வைத்த தெய்வம் ஒபாமா: விடை பெறுவதை தாங்க முடியாத அமெரிக்க மக்கள்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமா தன்னுடைய கடைசி உரையை நாட்டு மக்கள் முன்னிலையில் ஆற்றினார்.

அப்போது அவர் நீங்கள் தான் என்னை சிறந்த ஜனாதிபதியாக உருவாக்கினீர்கள், உங்களால் தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்நிலையில் ஒபாமா குறித்து அமெரிக்க மக்கள் சில டுவிட்டுகளை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

அதில், அல்லுரிங் ஐவி என்பவர், நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே ஒபாமாவை ஜனாதிபதியாக பார்த்து வருகிறேன். நான் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். அவர் இப்போது போவதையும் நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாயில்ட் ஸ்குர்ரல் என்பவர், ஒபாமா விடை பெறுகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது தந்தை எனக்கு செய்தது போல பல விடயங்களை அவரிடமிருந்து நான் பெற்றுள்ளேன். நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

எங்களை வாழ வைத்த தெய்வம் ஸெனி என்பவர் போட்டுள்ள நெகிழ்ச்சிகரமான டுவிட் தான் இது, நான் இன்று உயிருடன் இருக்கவும், இந்த டிவீட்டைப் போடவும் முக்கியக் காரணம் எனது ஜனாதிபதி தான். புற்றுநோயுடன் போராடும் பெண்களுக்கான மருத்துவத் திட்டத்தை கொண்டு வந்தவர். நன்றி ஒபாமா என்று நெகிழ்ந்துள்ளார்.

ராக்ஸான் கே என்பவர், ஜனாதிபதி ஒபாமாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் முழுமையானவர் இல்லை என்றாலும் கூட, நல்ல ஜனாதிபதியாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments